வெல்லத்துடிக்கும் உள்ளங்களின் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரிய “நமது நம்பிக்கை”, பல்லாயிரக்கணக்கான இல்லங்களில் நம்பிக்கைச் சுடரேற்றி வருகிறது. விறுவிறுப்பான கட்டுரைகள் – வித்தியாசமான தகவல்கள் – வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தனித்து நிற்கும் தரம் – சுய முன்னேற்ற நிபுணர்களின் சிறப்புமிக்க படைப்புகள் – நரம்புகளை மீட்டும் நம்பிக்கைக் கவிதைகள் என்று சர்வதேச தரத்தில் தயாராகும் தமிழ்மாத இதழ் இது.
உலகறிந்த பேச்சாளராய், உத்வேகம் தரும் எழுத்தாளராய் பன்முக ஆளுமையும் இளைஞர்கள்பால் தோழமையும் கொண்ட ‘கலைமாமணி’ மரபின்மைந்தன் முத்தையா, நமது நம்பிக்கையின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் திகழ்கிறார்.
செயல்துடிப்புமிக்க அலுவலர்களின் நேர்த்தியான செயல்திறனில் உருவாகும் நமது நம்பிக்கை, தமிழகமெங்கும் வெற்றிவலம் வருகிறது. ஆண்டுதோறும் ஆர்வலர்கள் கட்டணம் செலுத்தி ஆர்வமுடன் பங்கேற்கும் “வெற்றிவாசல்” ஆகியவை நமது நம்பிக்கை மாத இதழின் சிலிர்ப்பூட்டும் சிறப்பம்சங்கள்.
ஏராளமான வாசகர்களின் பெருமதிப்பை பெற்ற நமது நம்பிக்கை மாத இதழ். 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு மேலாக வாசகர்களின் மனதில், அவர்கள் பெற்றிருக்கும் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கும் இதழ். இலக்குகளை எட்ட துடிப்போருக்கு, சவால்களை வெல்ல நினைப்பவர்களுக்கு, சாதிக்க துடிக்கிற யாவருக்கும் இந்த இதழ் ஓரு வழிகாட்டி .
ஒவ்வொரு பக்கங்களும் நம் வெற்றிக்கு பக்க பலமாய் திகழும் நமது நம்பிக்கை, புத்தக வடிவில் உங்கள் கரம் தவழ்ந்த நமது நம்பிக்கை இதழ் இப்போது வலைத்தளத்தில் உங்கள் இல்லம் தேடி.வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்கு மட்டுமல்ல…வெற்றி நோக்கி இலட்சியப்பயணத்தில் இணைந்து கொள்ள!உங்களை அன்போடு வரவேற்கிறோம்…